கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிக்கும்: கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவிப்பு

கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிக்கும்: கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவிப்பு

கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிக்கும்: கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2022 | 4:24 pm

Colombo (News 1st) கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை எதிர்வரும் நாட்களில் எதிர்பாராத வகையில் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது.

விலங்கு உணவிற்கான தட்டுப்பாடு காரணமாக விலை அதிகரிக்கப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி தற்போது 1200 ரூபாவிற்கும் மேல் விற்பனை செய்யப்படுகின்றது. முட்டை ஒன்று 47 ரூபா முதல் 50 ரூபா வரை விற்கப்படுகின்றது.

சிறு மற்றும் நடுத்தர கோழி பண்ணையாளர்கள் சிலர் தமது தொழிலை கைவிட்டுள்ளதாகவும் ஏற்கனவே இது குறித்து அரசாங்கத்திற்கு அறிவித்திருந்ததாகவும் அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரட்ண குறிப்பிட்டார்.

தற்போது கையிருப்பிலுள்ள உணவு இரண்டு மாதங்களுக்கே போதுமானது என்பதால், சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொள்வனவு செய்ய நேரிடுவதாகவும் அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

விலங்கு உணவினை கொள்வனவு செய்வதற்கு மாதாந்தம் 30 அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும் அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலகரட்ண மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்