மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு – சுகாதார அமைச்சு உறுதி

மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு – சுகாதார அமைச்சு உறுதி

மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு – சுகாதார அமைச்சு உறுதி

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2022 | 8:00 am

Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

மருந்துகளை கொண்டுவருவதற்கு தேவையான நிதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமான 14 மருந்து வகைகள் தேவையானளவு கையிருப்பிலுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், மேலும் 186 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்