இலங்கைக்கு 120 மில்லியன் டொலர் கடன் வழங்க அமெரிக்கா அனுமதி

இலங்கைக்கு 120 மில்லியன் டொலர் கடன் வழங்க அமெரிக்கா அனுமதி

இலங்கைக்கு 120 மில்லியன் டொலர் கடன் வழங்க அமெரிக்கா அனுமதி

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2022 | 7:46 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் U.S. International Development Finance Corporation (DFC) இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர் கடன் வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

சிறிய , நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக இதில் 100 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.

மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்காக 15 மில்லியன் டொலர் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த கடன் தொகையில் 5 மில்லியன் டொலர் உணவு உற்பத்தி நிறுவனமொன்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்