இன்றும்(15) எரிவாயு விநியோகம் இல்லை - லிட்ரோ

இன்றும்(15) எரிவாயு விநியோகம் இல்லை - லிட்ரோ

by Staff Writer 15-06-2022 | 8:54 AM
Colombo (News 1st) இன்றைய தினமும்(15) சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இயலாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 நாட்களாக கெரவலப்பிட்டிய கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கு, கட்டணம் செலுத்தப்பட்ட போதிலும் கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு எற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கும் எரிவாயு சிலிண்டர்களின் அளவை கூற முடியாதுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில், எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மக்கள் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

ஏனைய செய்திகள்