வத்தளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை

வத்தளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை

வத்தளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2022 | 1:35 pm

Colombo (News 1st) வத்தளை – எலகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – 15,  மட்டக்குளி, அலிவத்த பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

சடலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் இரு குழுக்களிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றமையால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்