பாழடைந்த அறையிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

பாழடைந்த அறையிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2022 | 11:43 am

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி ஊரெழுவில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போயிருந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊரெழு கிழக்கு பகுதியிலுள்ள பாழடைந்த அறையொன்றில் இருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் இணுவில் பகுதியைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஒருவராவார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி, சடலம் மீதான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்