அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2022 | 12:37 pm

Colombo (News 1st) தமது தகைமைகள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பப்படிவத்தில் தமது சேவைக்காலம், பணிபுரியும் இடம் மற்றும் தொழில் தகைமை என்பன உள்ளடக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனத்திற்காக உரிய திட்டமொன்றை வகுக்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவங்கள் அனுப்பிவைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பதிகாரிகளை நியமிப்பதற்கான உரிய, முறையான திட்டமொன்று பொலிஸ் திணைக்களத்திடம் இல்லை என அண்மையில் வௌிக்கொணரப்பட்டது.

பொலிஸ்மா அதிபரினால் பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்