மருந்து கொள்வனவிற்காக வைத்தியர் சாஃபி அன்பளிப்பு

தமது நிலுவை சம்பளத்தை அத்தியாவசிய மருந்து கொள்வனவிற்காக அன்பளிப்பு செய்தார் வைத்தியர் சாஃபி சஹாப்தீன்

by Staff Writer 13-06-2022 | 10:19 PM
Colombo (News 1st) நான்காயிரம் பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது செய்யப்பட்டிருந்த குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சாஃபி சஹாப்தீனுக்கு கிடைக்கவேண்டியிருந்த நிலுவை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கான நிலுவை சம்பளம் தமக்கு கிடைத்ததாக வைத்தியர் சாஃபி சஹாப்தீன் தெரிவித்தார். இவ்வாறு கிடைத்த 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 47 சதத்தை நோயாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்த வைத்தியர் சாஃபி சஹாப்தீன் நடவடிக்கை எடுத்துள்ளார். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில், விலைமனு கோரல் நடைமுறையை பின்பற்றி மருந்து வகைகளை கொள்வனவு செய்து நோயாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு வைத்தியர் சாஃபி தீர்மானித்துள்ளார்.

ஏனைய செய்திகள்