மே 09 வன்முறை சம்பவங்கள்: மேலும் 21 பேர் கைது

மே 09 வன்முறை சம்பவங்கள்: மேலும் 21 பேர் கைது

by Staff Writer 12-06-2022 | 5:08 PM
Colombo (News 1st) கடந்த மே மாதம் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 21 பேர் நேற்று(11) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. கடந்த மே 9ஆம் திகதி 857 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. குறித்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1,083 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.