பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

by Staff Writer 12-06-2022 | 5:39 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்த 25 - 30 வயதுக்கு இடைப்பட்ட வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் செலுத்திச்சென்ற சைக்கிளும் அதே இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.