அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க திட்டம்

by Staff Writer 12-06-2022 | 7:46 PM
Colombo (News 1st) அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.