மல்லாவி பகுதியில் குடும்பஸ்தர் கொலை

by Staff Writer 12-06-2022 | 4:35 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மல்லாவி, பாலிநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளந்தெரியாதோரால் தலையில் தாக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்றிரவு(11) பாலிநகர் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியவரே இன்று(12) காலை வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலிநகர் பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 40 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு - மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.