சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க திட்டம்

சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க திட்டம்

by Staff Writer 11-06-2022 | 3:14 PM
Colombo (News 1st) சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு சந்தைகளில் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எனினும், அது உலக சந்தையின் விலையின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார். கடந்த இரண்டு வாரங்களில் சீனியின் விலை பெருமளவில் அதிகரிக்கப்படுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். எவ்வாறாயினும், அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வோர் மீது நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.