கல்வி அமைச்சு முன்பாக பல்கலை மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கல்வி அமைச்சு முன்பாக பல்கலை மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கல்வி அமைச்சு முன்பாக பல்கலை மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2022 | 3:59 pm

Colombo (News 1st) கல்வி அமைச்சின் முன்பாக நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன், போராட்டத்தினால் கல்வி அமைச்சின் பிரதான நுழைவாயிலுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கடுவளை நீதவானிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்