இரண்டு அமைச்சுகளுக்கான விடயதானங்களில் திருத்தம்

இரண்டு அமைச்சுகளுக்கான விடயதானங்களில் திருத்தம்

by Staff Writer 10-06-2022 | 3:15 PM
Colombo (News 1st) இரண்டு அமைச்சுகளுக்கான விடயதானங்கள் திருத்தப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு , மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ், 15 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை டெலிகொம் நிறுவனம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் இணை நிறுவனங்கள், இலங்கை முதலீட்டு சபை,கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், இலங்கை தரவளவு நிறுவனம், Colombo Lotus Tower முகாமைத்துவ நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனை தவிர, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழும் 15 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மகளிர் தொடர்பான தேசிய குழு, இலங்கை மகளிர் பணியகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், மகளிர் தொடர்பான தேசிய குழு, சிறுநீரக நிதியம், சமூக சேவைகள் திணைக்களம், வலது குறைந்த ஆட்களுக்கான தேசிய பொது செயலகம், சௌபாக்கியா அபிவிருத்தி பணியகம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டுள்ளன

ஏனைய செய்திகள்