மேரிலேண்ட் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி 

மேரிலேண்டில் துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி 

by Staff Writer 10-06-2022 | 3:48 PM
Colombo (News 1st) அமெரிக்கா - மேரிலேண்டில் (Maryland) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஸ்மித்ஸ்பர்க்கின் (mithsburg) மேரிலேண்ட் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் துப்பாக்கிதாரிக்கு காயமேற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட நபரால் குறித்த பகுதியிலுள்ளவர்கள் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளானமை தற்போது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நியூ​யார்க், டெக்சாஸ், ஓக்லஹோமாவில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் காரணமாக துப்பாக்கி வன்முறைச் சட்டங்களை கடுமையாக்குமாறு அமெரிக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.