பசிலுக்கு பதில் தம்மிக்கவின் பெயர் பரிந்துரை

பசிலின் இராஜினாமாவால் ஏற்பட்ட  வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரை

by Bella Dalima 10-06-2022 | 2:55 PM
Colombo (News 1st) பசில் ராஜபக்ஸ இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமது கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க பெரேராவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பசில் ராஜபக்ஸ நேற்று இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.