நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் பலி

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் பலி

நைஜீரியாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2022 | 7:13 pm

நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் பலியாகினர்.

சமீப காலமாக நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும் ஆட்கடத்தலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடுனா மாகாணத்தை சேர்ந்த கஜுரா கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தோலிக்க தேவாலயத்தில் மா்ம நபா்கள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 போ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்