இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சிங்கப்பூர் இணக்கம்

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சிங்கப்பூர் இணக்கம்

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சிங்கப்பூர் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2022 | 3:32 pm

Colombo (News 1st) இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவிகளை வழங்கவும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அதிகரிக்கவும் இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், சிங்கப்பூருக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பிரதி பிரதமராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ள அந்நாட்டின் தற்போதைய நிதி அமைச்சர் லோரன்ஸ் வோங் மற்றும் சிங்கப்பூரின் சட்டம் , உள்துறை அமைச்சர் கா.சண்முகம் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்