மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(09)

மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(09)

மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(09)

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2022 | 9:01 am

Colombo (News 1st) மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(09) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்த சட்டமூலம், பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தை இன்றைய தினம்(09) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் எதிர்வரும் நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக இந்த சட்டமூலம் இன்று(09) விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று(08) தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்