பொலிஸ் தலைமையகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

பொலிஸ் தலைமையகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2022 | 4:55 pm

Colombo (News 1st) மக்கள் தன்னெழுச்சி போராட்டமான கோட்டாகோகம மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவித்து பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம அறவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.

போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள் இன்று கொழும்பு கோட்டையில் இருந்து பொலிஸ் தலைமையகம் வரை பேரணி முன்னெடுத்தனர்.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கோட்டாகோகம தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவுபெறுவதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் பு​கை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து கோட்டாகோகம போராட்டக்களத்தை நோக்கி சென்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்