காட்டு யானை தாக்கியதில் பலியான 4 மாத குழந்தை

காட்டு யானை தாக்கியதில் பலியான 4 மாத குழந்தை

காட்டு யானை தாக்கியதில் பலியான 4 மாத குழந்தை

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2022 | 12:30 pm

Colombo (News 1st) அக்கரைப்பற்று – பள்ளக்காடு பகுதியில் காட்டு யானை தாக்கி 04 மாத குழந்தையொன்று உயிரிழந்த துர்ப்பாக்கிய சம்பவம் நேற்று(08) பதிவாகியுள்ளது.

பள்ளக்காடு பகுதியில் நேற்று(08) மாலை 5 மணியளவில் பெற்றோர் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த குழந்தையின் தாயார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்