இன்றிரவு 8 மணிக்கு முன்னர் ஆஜராக வேண்டும்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் உத்தரவு

இன்றிரவு 8 மணிக்கு முன்னர் ஆஜராக வேண்டும்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் உத்தரவு

இன்றிரவு 8 மணிக்கு முன்னர் ஆஜராக வேண்டும்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2022 | 3:46 pm

Colombo (News 1st) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றிரவு 8 மணிக்கு முன்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், அவரை கைது செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், நீதிமன்றத்தில் ஆஜராகும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் எவ்வித கட்டளைகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்