சர்வ கட்சி அரசாங்கத்திற்கு சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2022 | 3:33 pm

Colombo (News 1st) சர்வ கட்சி அரசாங்கத்திற்கு சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 03 மாதங்களுக்கு முன்பிருந்தே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து இரண்டு தடவைகளில் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக மைத்திரிபால சிறிசேன கூறினார்.

சர்வதேச அமைப்புகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால் சர்வதேச அமைப்புகள் உதவுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு தேவையான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்