சர்வதேச போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு

சர்வதேச போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு

சர்வதேச போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2022 | 3:54 pm

Colombo (News 1st) இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

39 வயதாகும் மித்தாலி ராஜ் ஒரு நாள் போட்டிகளில் 7,805 ஓட்டங்கள் பெற்று உலகிலேயே மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

89 T20 போட்டிகளிலும் 12 டெஸ்ட் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.

இவர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 2017 இல் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்