பல நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கும்

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்: உலக வங்கி எச்சரிக்கை

by Bella Dalima 08-06-2022 | 4:54 PM
Colombo (News 1st) அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் மற்றும் குறைவடைந்து வரும் வளர்ச்சி என்பனவற்றால், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்வரும் ஆண்டுகளில் மிக மேசமான சவாலை எதிர்கொள்ள நேரிடுமென உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட நிலைமையை போன்று, எதிர்வரும் வருடங்களிலும் ஏற்படலாமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி வீதம், உலக வங்கியினால் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகரித்த பணவீக்கம் மற்றும் துறைசார் வளர்ச்சியின் மந்தநிலை என்பனவற்றால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை பல நாடுகள் எதிர்நோக்குவதை தடுக்க முடியாதென உலக வங்கியின் தலைவர் David Malpass தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் எண்ணெய் விலை 42 வீதத்தாலும் எரிசக்தி அல்லாத பொருட்களின் விலை 18 வீதத்தாலும் அதிகரிக்கப்படலாமென உலக வங்கியினால் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்