வர்த்தக மேல் நீதிமன்ற Fiscal அதிகாரி பணி நீக்கம்

Aeroflot தடுத்து வைப்பு; கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தின் Fiscal அதிகாரி பணி நீக்கம்

by Staff Writer 07-06-2022 | 7:32 PM
 Colombo (News 1st) ரஷ்யாவின் Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தின் Fiscal அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Aeroflot Airlines நிறுவனத்திற்கு சொந்தமான A330 விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு மீதான நடவடிக்கையில், நீதிமன்ற நடைமுறைகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சட்டத்தரணிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே பொருத்தமானது என நீதி அமைச்சு பிரதம நீதியரசருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.