பொலிஸாரின் வாகனத்தை சேதப்படுத்திய ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

பொலிஸாரின் வாகனத்தை சேதப்படுத்திய ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

பொலிஸாரின் வாகனத்தை சேதப்படுத்திய ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2022 | 6:22 am

Colombo (News 1st) கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி மாத்தறை – கொழும்பு பிரதான வீதியின் நில்வளா கங்கையின் மகாநாம பாலத்தை மறித்து எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போது, பொலிஸாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று(06) நபரொருவருக்கு மூன்றரை வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதற்கு மேலதிகமாக 6,000 ரூபா நஷ்டஈடு மற்றும் 50,000 ரூபா சேதத்திற்கான கட்டணமும் தண்டனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

30 வயதான மாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்