ஜூன் 9 ஆம் திகதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்

ஜூன் 9 ஆம் திகதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்

ஜூன் 9 ஆம் திகதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2022 | 5:17 pm

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

‘நானும் ரெளடி தான்’ பட உருவாக்கத்தின் போது, விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது.

இயக்குநர் விக்‌னேஷ் சிவன் லால்குடியை சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர். இவர்களின் காதல் திருமணம் ஜூன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

முதலில் திருப்பதியில் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்ததாகவும் பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால் மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்