English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Jun, 2022 | 8:09 pm
Colombo (News 1st) நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஒரு வருடத்திற்கு சம்பளம் இன்றி அமைச்சுப் பதவிகளை வகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர்களுக்கு விசேட சலுகைகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனினும், எரிபொருளுக்கு மாத்திரம் பாரிய தொகை செலவிடப்படுவதாகவும் எரிபொருள் இல்லாமல் பணிகளை முன்னெடுக்க முடியாது என்பதால், அதனை தொடர்ந்து வழங்கவுள்ளதாகவும் பந்துல குணவர்தன கூறினார்.
பந்துல குணவர்தன கூறும் வகையில், அமைச்சர் ஒருவரின் மாதாந்த சம்பளம் 65, 000 ரூபாவாகும்.
ஜனாதிபதி உள்ளடங்கலாக தற்போது 21 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருக்கின்றனர்.
21 அமைச்சர்களும் தமது சம்பளத்தை அர்ப்பணித்தால் மாதாந்தம் சுமார் 13,65, 000 ரூபா கிடைக்கும்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக பல கொடுப்பனவுகள் கிடைக்கின்றன.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் பயன்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் தற்போது அதிகபட்சமாக மூன்று வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
பெட்ரோல் வாகனமாயின், மாதாந்தம் 750 லிட்டர் பெட்ரோலும், டீசல் வாகனமாயின் மாதாந்தம் 600 லிட்டர் டீசலும் வழங்கப்படுகிறது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலை மாத்திரம் ஒரு அமைச்சர் பயன்படுத்துவாராக இருந்தால், அவர் அண்ணளவாக மாதமொன்றுக்கு எரிபொருளுக்காக மாத்திரம் 3,15,000 ரூபாவை செலவிடுகிறார்.
வாகனம், எரிபொருளுக்கு மேலதிகமாக பணிக்குழுவில் 15 பேரை இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்பும் அமைச்சருக்கு கிடைக்கும். இந்த பணிக்குழுவிற்கும் சம்பளமும் எரிபொருளும் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.
அமைச்சரின் தொலைபேசிக்காக மாதாந்தம் மேலும் 40,000 ரூபா வழங்கப்படவுள்ளதுடன், தனிப்பட்ட பணிக் குழுவிற்கும் 21,000 ரூபா தொலைபேசி கொடுப்பனவு கிடைக்கின்றது.
கொழும்பு மாநகர எல்லையில் உத்தியோகபூர்வ இல்லம் உள்ள அமைச்சர்களும் இந்த அமைச்சரவையில் இருக்கின்றனர்.
அமைச்சருக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாத அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தையும் கைவிடுவார்களா?
பாராளுமன்ற இணையத்தளத்திற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளம் 54,285 ரூபாவாகும்.
300 லிட்டருக்கும் மேற்பட்ட எரிபொருள் கொடுப்பனவு, மாதாந்தம் தொலைபேசிக்காக 50,000 ரூபா கொடுப்பனவு, ஒரு காலாண்டுக்கு 87,000 ரூபா முத்திரை கொடுப்பனவு உள்ளிட்ட மேலும் பல கொடுப்பனவுகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கின்றன.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களாக பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவுகளையும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து சிந்தித்து அர்ப்பணிப்பார்களா?
10 Jul, 2022 | 02:49 PM
06 May, 2022 | 04:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS