முகத்துவாரம் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

முகத்துவாரம் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2022 | 10:09 pm

Colombo (News 1st) முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெட்பானா தோட்டத்திற்கு முன்பாக இன்று(06) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு 15 – அளுத்மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இனைஞர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இவர் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையான ஒருவர் என பொலிஸார் கூறினர்.

போதைப்பொருள் விற்பனை அல்லது வேறு தகராறு காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முகத்துவாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்