முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி; ஐவர் காயம்

தனமல்விலயில் முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்

by Staff Writer 04-06-2022 | 4:15 PM
Colombo (News 1st) மொனராகலை - தனமல்வில, சூரியஆர பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். குறித்த முச்சக்கரவண்டியில் 9 பேர் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். உடவளவயிலிருந்து தனமல்வில நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.