நுகேகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் 7 மணித்தியால நீர்வெட்டு

நுகேகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் 7 மணித்தியால நீர்வெட்டு

நுகேகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் 7 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2022 | 3:42 pm

Colombo (News 1st) நுகேகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (04) இரவு 10 மணி முதல் நாளை (05) அதிகாலை 5 மணி வரை 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எத்துல்கோட்டே, பிட்டகோட்டை, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, பாகொட முதல் விஜேராம சந்தி மற்றும் ஹைலெவல் வீதியின் 7ஆம் கட்டை சந்தி ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அத்துடன், நுகேகொடை சந்தியிலிருந்து நாவல பல்கலைக்கழகம் வரையிலான அனைத்து குறுக்கு வீதிகளிலும் இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 9 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

இதற்கமைவாக, கொழும்பு 1, 2, 3, 4, 7, 8, 9, 10, 11 மற்றும் கடுவெல பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்