அம்பாறையில் காணாமற்போயிருந்த பெண் சடலமாக மீட்பு

by Bella Dalima 03-06-2022 | 5:26 PM
Colombo (News 1st) அம்பாறை - பெரிய நீலாவணை, மருதமுனையில் அண்மையில் காணாமற்போயிருந்த பெண் ஒருவர் நேற்று (02) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான 54 வயதான குறித்த பெண் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமற்போயிருந்தார். மருதமுனை - 65 சுனாமி வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியின் பின்பக்கமாக உள்ள குளத்திலிருந்து இவரது சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.