by Staff Writer 02-06-2022 | 5:57 PM
Colombo (News 1st) வவுனியா - ஈர பெரியகுளத்தில் குளிக்கச்சென்று நீரில் மூழ்கிய சிறுவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நான்கு பேர் இன்று பிற்பகல் குளிக்கச்சென்றிருந்த நிலையில், இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.
ஏனைய இருவரும் நீந்தி கரைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூழ்கிய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தேக்கவத்தையை சேர்ந்த 15 மற்றும் 16 வயதான வயதான சிறுவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஈர பெரியகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.