by Staff Writer 02-06-2022 | 7:16 PM
Colombo (News 1st) மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் கூடியவர்கள், அங்கிருந்து சென்று அறவழி போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.
இதற்கமைய, மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜரானார்.
இதன்போது, கோட்டாகோகம மற்றும் மைனாகோகம மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, தாம் அங்கு இருக்கவில்லை எனவும் அதற்கான ஆதாரத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் போவதாகவும் மஹிந்த கஹந்தகம குறிப்பிட்டார்.
மாநகர சபை கெமரா மூலம் பெறப்பட்ட முழுமையான சம்பவம் தொடர்பிலான காணொளியை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களம் மஹிந்த கஹந்தகமவை கைது செய்ததுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.