மதுபானம், சிகரெட் விலைகளை அதிகரிக்க அனுமதி

மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளை அதிகரிக்க அனுமதி

by Staff Writer 02-06-2022 | 8:15 AM
Colombo (News 1st) VAT வரி அதிகரிப்பிற்கு நிகராக முன்கூட்டிய அனுமதியின்றி விருப்பத்திற்கேற்ப மதுபானம் மற்றும் சிகரெட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பெறுமதி சேர் வரி(VAT) மற்றும் தொலைத்தொடர்புகள் வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், பெறுமதி சேர் வரி (VAT) 8 வீதத்திலிருந்து 12 வீதம் வரையும் தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்திலிருந்து 15 வீதம் வரையும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.