நீதி அமைச்சரை சந்திக்கும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள்

நீதி அமைச்சரை சந்திக்கும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள்

நீதி அமைச்சரை சந்திக்கும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள்

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2022 | 7:29 am

Colombo (News 1st) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இடையே இன்று(02) சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று(02) முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதனிடையே, 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதமர் இடையெ நாளை(03) கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது.

பிரதமரின் செயலகத்தில் நாளை(03) மாலை 04 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்