ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2022 | 8:40 am

Colombo (News 1st) ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் கடந்த 27ஆம் திகதி நிறைவடைந்தது.

அதற்கமைய, செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்