இன்று (2) முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்

இன்று (2) முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்

by Bella Dalima 02-06-2022 | 4:07 PM
Colombo (News 1st) இன்று (2) முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் காரணமாக மின்வெட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றுடன் (01) பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி, இன்றும் (2) நாளையும் (3) இரவு வேளையில் ஒரு மணி நேரமும் பகலில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சனிக்கிழமை (4) ஒரு மணி நேரம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அதேவேளை, 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.