நிதி அமைச்சரால் வர்த்தமானி வௌியீடு

VAT மற்றும் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு; வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 01-06-2022 | 11:33 AM
Colombo (News 1st) அதிகரிக்கப்பட்ட வரி இன்று(01) முதல் அமுலாகும் வகையில் வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பெறுமதி சேர் வரி(VAT) மற்றும் தொலைத்தொடர்புகள் வரியினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், பெறுமதி சேர் வரி (VAT) 8 வீதத்திலிருந்து 12 வீதம் வரையும் தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்திலிருந்து 15 வீதம் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இறைவரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரி என்பனவும் அதிகரிக்கப்படவுள்ளன.