பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் காலமானார்

பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் காலமானார்

by Chandrasekaram Chandravadani 01-06-2022 | 7:16 AM
Colombo (News 1st) பிரபல பின்னணி இசை பாடகர் KK என அறியப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்(KRISHNAKUMAR KUNNATH) காலமானார். கிருஷ்ணகுமார் குன்னத் தமது 53ஆவது வயதில் நேற்றிரவு(31) காலமானார். பிரபல பாடகரான KK, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். 1968 ஆம் ஆண்டு டில்லியில் பிறந்த கிருஷ்ணகுமார் குன்னத், 1999ஆம் ஆண்டில் தனது முதலாவது அல்பம் பாடலை (Pal) வௌியிட்டிருந்தார். அன்னாரின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் திரையுலகத்தினர் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். கல்கத்தாவில் நேற்று(31) இடம்பெற்ற கல்லூரி கலாசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது, கிருஷ்ணகுமார் குன்னதிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.