by Staff Writer 01-06-2022 | 4:04 PM
Colombo (News 1st) அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவார்கள் என கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இறுதியாக கூடிய மத்திய செயற்குழு கூட்டத்தின் போது, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருந்து, பொதுமக்களுக்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சிறந்த தீர்மானங்களுக்கு மாத்திரம் ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளும் அனைவரையும், கட்சியின் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.