ஆயிஷா கொலை: சந்தேகநபருக்கு ஜூன் 9 வரை விளக்கமறியல்

அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபருக்கு ஜூன் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 01-06-2022 | 5:46 PM
Colombo (News 1st) பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தனிப்பட்ட ரீதியில் வாக்குமூலம் வழங்க தனக்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அட்டுலுகம பகுதியை சேர்ந்த 29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.