மஹிந்த ராஜபக்ஸவை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருக்க தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஸவை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருக்க தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஸவை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2022 | 8:28 am

Colombo (News 1st) ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ அமைதிப் போராட்டங்களின் மீது கடந்த 09ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இன்று(01) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து விசாரணைகளுக்காக மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்