இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமனம்

இராணுவத்தின் 24 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம் 

by Staff Writer 31-05-2022 | 3:27 PM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் 24 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே  நாளை (01) முதல் Lieutenant General தரத்திற்கு பதவி உயர்த்தப்படவுள்ளார். இதேவேளை, இராணுவத் தளபதியின் கடமைகளிலிருந்து இன்று விடுகை பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா, நாளை முதல் புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானிக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்து ஜெனரல் சவேந்திர சில்வா இன்று முற்பகல்  பெற்றுக்கொண்டார். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.