இராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுகை பெறும் சவேந்திர சில்வா

இராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுகை பெறும் சவேந்திர சில்வா

எழுத்தாளர் Staff Writer

31 May, 2022 | 8:16 pm

Colombo (News 1st) ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதி பதவியில் இருந்து இன்று விடுகை பெறுகிறார்.

நாளை (01) முதல் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக அவர் செயற்படவுள்ளார்.

இராணுவத் தளபதியாக செயற்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக நியமிப்பதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று வழங்கினார்.

இராணுவத் தளபதி பதவியில் இருந்து விடுகை பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தலைமையகத்தில் இன்று பிற்பகல் படையினரை சந்தித்தார்.

இதன்போது, 23 ஆவது இராணுவத் தளபதியாக தான் பணியாற்றிய காலத்தில், தனது சேவையில் சந்தேகத்திற்குரிய செயற்பாடுகள், நெகிழ்வுத்தன்மை, அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விடயங்கள் ஒருபோதும் இடம்பெறவில்லை என சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்