இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய்

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய்

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை நோய்

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2022 | 4:30 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 71 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால், அறிகுறியுடன் கூடிய தொற்று மற்றும் கடுமையான பாதிப்பிற்கான ஆபத்து குறையும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்