சஷியின் பிணை கோரிக்கை மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

சஷி வீரவன்சவின் பிணை கோரிக்கை மீதான பரிசீலனை நாளை(31) வரை ஒத்திவைப்பு

by Staff Writer 30-05-2022 | 2:55 PM
Colombo (News 1st) இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்ச தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நாளை(31) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்ச, சிறை அதிகாரிகளினால் இன்று(30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிணை மனு கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரவேண்டியுள்ளதால், கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க விசாரணையை நாளை(31) வரை ஒத்திவைத்துள்ளார். போலி ஆவணங்களை சமர்ப்பித்து, முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சஷி வீரவன்சவிற்கு 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்த 27 ஆம் திகதி உத்தரவிடப்பட்டது.