மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் WHO

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம்

by Staff Writer 29-05-2022 | 3:08 PM
Colombo (News 1st) இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவினூடாக அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையில் அடிப்படை சுகாதார சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவதில் உலக சுகாதார ஸ்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார மாநாட்டின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாக கலாநிதி Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார். இதனிடையே, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியால் நாட்டில் நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு சுமார் 30 வீதத்தால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.